இந்தியாவை மறைமுகமாக மிரட்டிய அமெரிக்கா!
இந்தியாவிற்கு வந்த அமெரிக்க அதிகாரி தலீப் சிங்(Talip Singh) பயன்படுத்திய சில வார்த்தைகளை இந்திய வெளியுறவுத்துறை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் இதற்கு பதில் அளித்துள்ள உள்ள நிலையில், இந்தியாவை மிரட்டும் தொனியில் தலீப் சிங் பேசியதாக விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தலீப் சிங்(Talip Singh) இந்தியா வந்துவிட்டு சென்றதில் இருந்தே அவரை பற்றித்தான் இணையம் முழுக்க பேச்சாக இருக்கிறது.
அவர் என்ன பேசினார் என்று பார்க்கும் முன் அவர் யார் என்று பார்த்து விடலாம். அமெரிக்க அதிபரின் ஆலோசகர்களின் ஒருவரும், அந்நாட்டு தேசிய பாதுகாப்பு துறை ஆலோசராகவும் இருப்பவர் தான் தலீப் சிங்(Talip Singh). இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இதற்காக இவரை இந்தியாவிற்கு அனுப்பி இருந்தனர். அமெரிக்க அதிபருக்கு தேசிய பாதுகாப்பு ரீதியாகவும், சர்வதேச பொருளாதார ரீதியாகவும் இவர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் பொருளாதார தடைகளை உருவாக்கிய மூளை இவருடையது தான். பிடனுக்கு மிகவும் நெருக்கமானவராக பார்க்கப்படுபவர். ஒபாமா அதிபராக இருந்த போது அமெரிக்க கருவூல பணியில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் அப்படி என்னதான் பேசினார்? நேற்று இந்தியா வந்த தலீப் சிங் வெளியுறவுத்துறை செயலாளர் ஹரிஷ் வர்தன் உடன் சந்திப்பு நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரஷ்யா மீது விதிக்கப்பட்டு இருக்கும் பொருளாதார தடைகளை மதிக்காமல் செயல்படும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா எதிர்க்கவில்லை. இது பொருளாதார தடைக்கு எதிரானது இல்லை. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை துரிதமாக அதிகரிக்க கூடாது.
அமெரிக்கா நட்பு நாடுகள் ரஷ்யாவை சார்ந்து இருக்க கூடாது என்று கூறினார். டாலருக்கு ஆப்பு வைக்க கூடாது இந்தியா ரஷ்யாவிடம் கூடுதல் எண்ணெய் வாங்கும் முடிவில் இருந்தது. ரஷ்யா தள்ளுபடி விலையில் இந்தியாவிற்கு எண்ணெய் கொடுக்கும் நிலையில் தலீப் சிங் (Talip Singh) இப்படி இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசி இருக்கிறார். அதோடு ரஷ்யாவுடன் இந்தியா ரூபிள் வர்த்தகத்தை மேற்கொள்ளும் முடிவில் இருக்கிறது.
இதை விமர்சிக்கும் வகையில் அமெரிக்காவின் டாலர் வர்த்தகத்தை நீக்கும் வகையில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் வேறு விதமான பண பரிமாற்ற சிஸ்டத்திற்கு செல்வதை விரும்ப மாட்டோம் என்று கூறி உள்ளது. பின்விளைவுகள் அதோடு எண்களின் பொருளாதார தடைகளை எதிர்க்கும் விதமாக அல்லது மட்டுப்படுத்தும் விதமாக செயல்படும் நாடுகளை நாங்கள் விரும்ப மாட்டோம். எங்கள் பொருளாதார தடையின் கட்டுப்பாடுகள் பற்றி வில்லகவே இந்தியாவிற்கு வந்தேன்.
அதேபோல் சர்வதேச பிரச்சனைகளை ஒன்றாக இணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று கூற வேண்டும். எங்களின் பொருளாதார தடைகளை மட்டுப்படுத்தும் வகையில் செயல்படும் நாடுகள் பின்விளைவுகளை எதிர்கொள்ளும் என்றும் கூறிக்கொள்கிறேன் என்று தலீப் சிங்(Talip Singh) கூறினார். இவர் இந்தியா என்று கூறவில்லை என்றாலும்.
இந்தியாவில் இருந்து கொண்டு இப்படி பேசியதுதான் சர்ச்சையாகி உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவிடம் இந்தியா கூடுதல் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை என்று தெரிகிறது. இதனால் இந்தியாவிற்கு கூடுதல் எண்ணெய் விற்க அமெரிக்கா முன் வருவது குறிப்பிடத்தக்கது. சீனாவை வைத்து மிரட்டல் இதெல்லாம் போக இன்னொரு பக்கம் சீனாவை வைத்தும் அமெரிக்கா இந்தியாவை மிரட்டி உள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் நெருங்கிய நட்பு நாடுகள். இதில் சீனாதான் பாஸ். சீனா சொன்னதைதான் அமெரிக்கா கேட்கும். இதனால் சீனா இந்தியாவை தாக்கினால். ரஷ்யா துணைக்கு வரும் என்று நீங்கள் நினைக்க வேண்டாம் என்று அமெரிக்காவின் தலீப் சிங்(Talip Singh)மிரட்டிவிட்டு சென்று இருக்கிறார். ஜெய்சங்கர் கண்டனம் தலீப் சிங்(Talip Singh) இப்படி பேசியதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை.
ஐநாவிற்கான முன்னாள் இந்திய தூதர் சையது அக்பருதீன், தலீப் சிங்(Talip Singh) பேச்சு நல்லது அல்ல. அவர் ராஜாங்க ரீதியாக பேசவில்லை. அவரின் பேச்சு அழுத்தம் கொடுக்கும் வகையில் இருக்கிறது. ரஷ்யாவிடம் கூடுதல் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விமர்சனம் செய்து வரும் நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
இந்தியா எதிர்ப்பு ஐரோப்பாவும் கூட ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் எண்ணெய் வாங்குகிறது. ரஷ்யாவிடம் பிப்ரவரியில் ஐரோப்பா வாங்கிய எண்ணெய்யை விட 15 சதவிகிதம் அதிகமாக மார்ச்சில் வாங்கி உள்ளது. ஆனால் இந்தியாவிற்கு எதிராக மட்டும் பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது. இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்கிறார்களோ என்ற கேள்வி இதன் மூலம் எழுந்துள்ளது, என்று ஜெய்சங்கர் விமர்சனம் செய்துள்ளார்.