அமெரிக்காவில் ஈவிரக்கமின்றி இளைஞன் நடத்திய தாக்குதல்; ஐவர் பலி 25 பேர் காயம்(Photos)
அமெரிக்காவின் இரவு விடுதியொன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டதுடன் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் கொலராடோ மாநிலத்தின் கொலராடோ ஸ்பிரிங்ஸ் நகரிலுள்ள கிளப் கியூ எனும் இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இரவு இடம்பெற்றுள்ளது.
பாலின மாற்றம் செய்ததால் வன்முறைகளுக்கு இலக்கு வைக்கப்பட்டவர்களை நினைவுகூரும் தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வின்போதே மேற்படி அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 22 வயதான ஓர் இளைஞனே துப்பாக்கிப் பிரயோகம் செய்தாகவும் அந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸால் தெரிவித்துள்ளனர்.
கைதான இளைஞன் அண்டர்சன் லீ அல்ட்ரிச் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.