டொரொன்டோவில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயம்
டொரொன்டோ பெரும்பாக பகுதியில் உள்ள 400ம் இலக்க அதிவேக நெடுஞ்சாலையில்இரவு ஏற்பட்ட விபத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு ஆண் ஆபத்தான நிலையில் இருப்பதுடன், நான்கு குழந்தைகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து இரவு சுமார் 8 மணியளவில், கிங் (King) பகுதியில், நெடுஞ்சாலையின் வட திசை வழித்தடங்களில் இடம்பெற்றது. இரு பெரியவர்கள் மற்றும் நான்கு குழந்தைகள் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மேலும், ஒரு ஆண் கடுமையாக காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துக்குப் பின்னர் மூடப்பட்டிருந்த ஹைவே 400 இன் அனைத்து வழித்தடங்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.