வெளிநாட்டினரை வரவேற்க தயாராகும் அமெரிக்கா!

Sulokshi
Report this article
நவம்பர் மாதத்தில் இருந்து பிற நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் மற்றும் பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவினுள் செல்வதர்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அமெரிக்கா வருவோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்பதுடன் அதோடு, பயணத்திற்கு 3 நாள்கள் முன்பாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதற்கான சான்றிதழை வைத்திருப்பது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் குறித்த விவரங்களை தர வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் குழந்தைகளுக்கு இத்தகைய கட்டுப்பாடுகள் பொருந்தாது எனவும் அமெரிக்கா அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.