வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால்

Sulokshi
Report this article
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு காரணமாகவே காலமானார் என வத்திக்கான் திருச்சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார்
வத்திக்கான் மருத்துவர் ஆண்ட்ரியா ஆர்க்காங்கெலி வத்திக்கானால் வெளியிடப்பட்ட இறப்புச் சான்றிதழில் தெரிவித்துள்ளார்.
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தையாக 12 ஆண்டுகள் இறைச் சேவையாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தனது 88 ஆவது வயதில் சென். பீட்டர்ஸ் பெசிலிக்காவிலுள்ள இல்லத்தில் நேற்று (21) காலமானார்.
அவரது நித்திய இளைப்பாறலை வத்திக்கான் திருச்சபை காணொளி அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்தது. இதேவேளை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸிற்கு உலக நாட்டு தலைவர்களும் , மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.