கனடாவின் வங்கியொன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப சிக்கல்
இன்றைய தினம், ஸ்கோஷியா வங்கியின் நூற்றுக்கணக்கான பயனாளர்களின் சேவை தடைபட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டது.
எனினும் வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து, "முற்றிலும் மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த வங்கி அறிவித்துள்ளது.
ஸ்கோஷியா வங்கியின் மொபைல் செயலியில் வெளியான அறிவிப்பில், இன்று காலை 8.00 மணியளவில், அலைபேசி செயலி மற்றும் ஆன்லைன் வங்கி சேவைகளும் தடைப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
காலை 8.15 முதல் 9.00 மணி வரை அந்த மொபைல் வங்கி சேவையில் தடை ஏற்பட்டது என வங்கி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சேவை பாதிப்புகள் குறித்த புகார்கள் அதிக அளவில் 8.36 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. சுமார் 675 முறைப்பாடுகள் செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வங்கி தற்போது தனது அனைத்து சேவைகளும் மீண்டும் வழக்கமானபடி இயங்குகின்றன என உறுதிபடுத்தியுள்ளது.