வெளிநாடொன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட அமெரிக்க விமானி ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இந்தோனேசியாவின் பப்புவா மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள், சிறிய ரக பயணிகள் விமானத்தை தீக்கிரையாக்கி அதனை ஓட்டி வந்த அமெரிக்க விமானியை சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரிவினை இயற்கை வளங்கள் நிறைந்த பப்புவா மாகாணத்தின் மேற்குப் பகுதியை இந்தோனேசியாவிலிருந்து பிரித்துத் தனி நாடாக்க அங்குள்ள சில குழுக்கள் நீண்ட காலமாகத் கொரில்லாப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் 'மேற்கு பப்புவா தேசிய விடுதலை ராணுவம்' என்ற பிரிவினைவாத குழு தற்போதைய தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
பப்புவாவின் யாஹுகிமோ பிராந்தியத்தில் உள்ள பலிங்காமா மாவட்டத்தில் விமானம் தரையிறங்கிய உடனேயே தங்கள் போராளிகள் அமெரிக்கப் விமானியாக நிகோலஸ் கோஸெலின் என்பவரைச் சுட்டுக் கொன்றதாக அக்குழுவில் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை பப்புவாவில் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்குள், இந்தோனேசிய அரசு பயணிகள் விமானங்களை அனுமதிக்கக் கூடாது என்று அக்குழு எச்சரித்துள்ளது.
யாஹுகிமோவில் உள்ள உள்ளூர் விமான நிலையத்தில் அமெரிக்கப் விமானியின் உடலும், எரிந்து சாம்பலான ஒரு சிறிய பயணிகள் விமானமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்தோனேசியப் பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.