கடவுச்சீட்டில் எழுதியதால் திருப்பி அனுப்பப்பட்ட அமெரிக்க பயணி
போலந்தில் கடவுச்சீட்டில் எழுதி இருந்ததால் அமெரிக்க பயணிக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுத்ததாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த அந்தப் பெண் கடந்த புதன்கிழமை (8 ஜனவரி) விமானத்தில் லண்டனிலிருந்து போலந்திற்குச் சென்றார்.
இந்நிலையில் அவரது கடவுச்சீட்டில் குடிநுழைவு முத்திரைகளுக்குக் கீழே விமான நிலையப் பெயர்களும் இடங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்ததால் அதிகாரிகள் அவரைத் தடுத்தனர்.
எனினும் கடவுச்சீட்ச்சில் எழுதக்கூடாது என்பது தமக்குத் தெரியாது என அவர் அதிகாரிகளிடம் கூறியதாய் AFP செய்தி நிறுவனம் தெரிவித்தது.
நாட்டிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அவர் விமான நிலையத்திலேயே இருக்க நேர்ந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் (9 ஜனவரி) அவர் லண்டனுக்கு விமானம் வழி திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டது.