கருப்பினத்திற்கு பெருமை சேர்த்த அமெரிக்கா!
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக கருப்பினத்தைச் சேர்ந்த கேதன்ஜி பிரெளன் ஜாக்சனை(Catanji Brown Jackson) நியமிக்க அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்தது.
அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் முதல் கருப்பின பெண் நீதிபதி என்ற பெருமையை இவர் பெறுகிறார். வயோதிகம் காரணமாக நீதிபதி ஸ்டீபன் பிரெயர்(Stephen Fryer) ஓய்வு பெறுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்தார்.
காலியாகும் இடத்துக்கு கருப்பினப் பெண்ணை நீதிபதியாக நியமிக்க அதிபர் ஜோ பைடன்(Joe Biden) உறுதிபூண்டிருந்தார்.
தற்போது தலைநகர் வாஷிங்டனில் உள்ள கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக உள்ள கேதன்ஜி பிரெளன் ஜாக்சன் (Catanji Brown Jackson) அமெரிக்க உச்சநீதிமன்றத்தின் 3-ஆவது பெண் நீதிபதியாக இருப்பார்.
உச்சநீதிமன்றத்தின் 233 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை 5 பெண் நீதிபதிகள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் 6-ஆவது பெண் நீதிபதியாகவும் கருப்பினத்தைச் சேர்ந்த முதல் பெண் நீதிபதியாகவும் கேதன்ஜி பிரெளன் ஜாக்சன் (Catanji Brown Jackson) திகழ்வார்.
இவருக்கு முன்பாக இரு கருப்பின ஆண்கள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிப் பதவி வாழ்நாள் நியமனமாகும்.