அமெரிக்கர்கள் வெளியேறுங்கள்; பிடன் அறிவிப்பு
யுக்ரைனில் வசிக்கும் அமெரிக்க மக்கள் வெளியேற வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
யுக்ரைன் மீது இராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வரும் நிலையில், ஜேர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் (Olaf Scholz), வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை (Joe Biden) சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய ஜோ பிடன் (Joe Biden), அத்தியாவசிய தூதர்களைத் தவிர உக்ரைனில் உள்ள அமெரிக்க நாட்டு மக்கள் வெளியேறுமாறு கூறினார்.
இதையடுத்து யுக்ரைனில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் அத்தியாவசிய பணியாளர்களை தவிர மற்ற பணியாளர்களும், தூதர்களின் குடும்ப உறுப்பினர்களும் நாடு திரும்ப அமெரிக்க வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே மாஸ்கோவில் உள்ள கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் ( Vladimir Putin) பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron ) பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தை ஐரோப்பிய கண்டத்தில் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் சூழலை உருவாக்க உதவும் என பிரான்ஸ் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron ) தெரிவித்துள்ளார்