கையெழுத்திடும் போது கோபம் கொண்ட மன்னர்! (Video)
மன்னர் சார்லஸ்(King Charles III) ஏற்கனவே பதவியேற்பு விழாவின்போது ஆவணம் ஒன்றில் கையெழுத்திடும் முன் தனது உதவியாளரிடம் முகம் சுழித்த விடயத்தைக் காட்டும் வீடியோ வைரலான நிலையில், அவர் மீண்டும் ஒருமுறை பொறுமையிழந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மன்னர் சார்லஸ்(King Charles III) மற்றும் அவரது மனைவி கமீலாவும்(Camilla) வட அயர்லாந்துக்கு வருகை புரிந்த நிலையில், விருந்தினர் பதிவேடு ஒன்றில் கையெழுத்திட நேரிட்டது.
அப்போது, மன்னரிடம் பேனா ஒன்று கொடுக்கப்பட, அதிலிருந்து மை கசிய, பொறுமையிழந்த மன்னர், கடவுளே, நான் இதை வெறுக்கிறேன் என்றார்.
தான் கையெழுத்துவிட்டு பேனாவை கமீலாவிடம் (Camilla)கொடுக்கும்போது, மன்னர் சார்லசின் கையில் மை பட்டிருப்பதை அவர் கவனித்து உங்கள் கை முழுவதும் மையாகிவிட்டது என்று கூற, எரிச்சலடைந்த அவர், என்னால் இந்த எரிச்சலூட்டும் விடயத்தை சகித்துக்கொள்ள முடியாது, ஒவ்வொரு முறையும் இப்படித்தான் நடக்கிறது என்று கோபத்துடன் சத்தமிட்டார்.
'Can’t bear this bloody thing … Every stinking time' — King Charles III expressed his frustration with a pen in the middle of a signing ceremony at Hillsborough Castle during his visit to Northern Ireland pic.twitter.com/xr3YxOh3et
— NowThis (@nowthisnews) September 14, 2022
மன்னரின் முன்னாள் உதவியாளர் ஒருவர், மன்னர் வேடிக்கையாகவும் நடந்துகொள்வார், அதே நேரத்தில் அவருக்கு சட்டென கோபமும் வந்துவிடும் என தெரிவித்துள்ளார்.