ரஷ்ய அதிபர் புட்டினை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை கொலை செய்வதற்கு உக்ரைன் மேற்கொண்ட சதிமுயற்சியை முறியடித்துள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிபர் புனினை கொல்ல உக்ரைன் அனுப்பிய இரண்டு ஆளில்லா விமானங்களை சுட்டுவீழ்த்தியுள்ளதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.
கிரம்ளினை நோக்கி இரண்டு ஆளில்லா விமானங்கள் அனுப்பட்டதாக தெரிவித்த ரஷ்ய அதிகாரிகள் அவை செயல் இழக்கச்செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
புட்டினிற்கு காயங்கள் ஏற்படவில்லை
அதோடு இதில் புட்டினிற்கு காயங்கள் ஏற்படவில்லை - கிரெம்ளினிற்கு சேதங்கள் ஏற்படவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இதனை பயங்கரவாத தாக்குதல் என கருதுவதாக தெரிவித்துள்ள ரஷ்யா தனக்கு பதில் தாக்குதலிற்கான உரிமையுள்ளது எனவும் எச்சரித்துள்ளது.
அதேசமயம் மே 9ம் திகதி வெற்றி தினத்திற்கு முன்னதாக இடம்பெற்ற இந்த சம்பவத்தை பயங்கரவாத முயற்சியாக படுகொலை முயற்சியாக கருதுவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
அதேவேளை இந்த குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் எவற்றையும் ரஷ்யா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.