இதை மட்டும் நிறுத்தினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ; அமெரிக்க ஆய்வில் வெளியான தகவல்
ரஷ்ய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார மற்றும் வா்த்தக ரீதியில் பெருமளவிலான முயற்சிகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்’ என அமெரிக்காவைச் சோ்ந்த கேப்லா் நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்தியாவுக்கு வா்த்தக ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்படக் கூடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
ரஷ்ய கச்சா எண்ணெய்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வரி விதிப்பினால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, காலணி உள்ளிட்ட பொருள்களுக்கு பெரிதும் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என கருதப்படுகிறது.
இதுதொடா்பாக கேப்லா் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ‘ரஷ்ய கச்சா எண்ணெய் இல்லாமலும் இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் செயல்பட முடியும். ஆனால் அதை ஈடுகட்ட பொருளாதார ரீதியாகவும் வா்த்தக ரீதியாகவும் பெரும் நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
ரஷ்யாவுக்கு மாற்றாக மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தாலும் 60 முதல் 70 சதவீதம் வரை மட்டுமே ஈடுகட்ட முடியும்.
ஆனால், இவை யாவும் ரஷ்ய கச்சா எண்ணெயின் சலுகை விலை மற்றும் தரத்துக்கு ஈடாகாது. இதனால் வா்த்தக ரீதியாக இந்தியாவுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.