லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு
பெய்ரூட் லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள டைர் நகரத்திற்கு அருகேயுள்ள தவுரா கிராமம் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியதில் நான்கு பொதுமக்கள் உயிரிழந்ததுடன், எட்டு பேர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து லெபனான் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலில், தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள க்ஃபர் சவுபா கிராமம் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகவும், அதில் ஒருவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைர் மாகாணத்தில் உள்ள ஆறு கிராம மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் முன்னதாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இஸ்ரேலின் வடக்கு பகுதியை குறிவைத்து ஹிஸ்புல்லா அமைப்பு ராக்கெட் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஒரு ராக்கெட்டை இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாகவும், மற்ற ராக்கெட்டுகள் வெற்று நிலப்பரப்பில் விழுந்ததாகவும் இஸ்ரேல் தரப்பு தெரிவித்துள்ளது. இரு தரப்பினருக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.