பிரிட்டன் அரசியல் மாற்றம் ; ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என உறுதி

London Election
By Sahana May 08, 2026 11:41 PM GMT
Report

லண்டன் உள்ளூராட்சி தேர்தல்களில் லேபர் கட்சி கடுமையான பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் வெளியான தேர்தல் முடிவுகள் லேபர் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதையடுத்து சில லேபர் எம்.பிக்கள், ஸ்டார்மர் தனது பதவி விலகலுக்கான காலக்கெடுவை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், தனது அமைச்சரவை சகாக்கள் ஆதரவு அளித்து வருவதாகவும், “நான் பதவி விலகி நாட்டை குழப்பத்தில் தள்ள மாட்டேன்” என்றும் கீர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். வேல்ஸில் கடந்த 27 ஆண்டுகளாக நீடித்த லேபர் கட்சியின் ஆட்சி இந்த தேர்தலுடன் முடிவுக்கு வந்துள்ளது.

பிரிட்டன் அரசியல் மாற்றம் ; ஸ்டார்மர் பதவி விலக மாட்டேன் என உறுதி | British Political Change Starmer Vows Not Resign

அதேவேளை, ஸ்கொட்லாந்தில் ஸ்கொடிஷ் நேஷனல் பார்ட்டி (SNP) மீண்டும் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கும் சூழல் காணப்படுகிறது. இங்கிலாந்தில் ரீஃபார்ம் யூகே கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

அந்தக் கட்சி 1,400-க்கும் அதிகமான உள்ளூராட்சி ஆசனங்களை கைப்பற்றி, பாரம்பரியமாக லேபர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகள் ஆதிக்கம் செலுத்திய பகுதிகளிலும் ஆட்சியை பிடித்துள்ளது.

பிபிசி வெளியிட்ட தேசிய வாக்கு பங்கீட்டு கணிப்பின் அடிப்படையில், ரீஃபார்ம் யூகே 26 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தில் உள்ளது.

கிரீன் கட்சி 18 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், லேபர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சிகள் தலா 17 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளன.

இந்த முடிவுகள், பிரித்தானிய அரசியலில் நீண்டகாலமாக நிலவிய இரு கட்சி ஆதிக்கம் முடிவுக்கு வருவதை சுட்டிக்காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், லேபர் கட்சி வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லாண்ட்ஸ் உள்ளிட்ட தனது பாரம்பரிய கோட்டைகளில் 1,100-க்கும் அதிகமான உள்ளூராட்சி இடங்களை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US