மகிழுந்தில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட அதிகாரி
பிரான்சில் காவல் துறை அதிகாரி மகிழுந்து தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாயன்று Montpellier பகுதியில் குறித்த சம்பவமானது இடம்பெற்றுள்ளது. வீதி கண்காணிப்பின் பொது காவலுக்கு இருந்த பொலிஸார் சந்தேகத்திக்கிடமான மகிழுந்து செல்வதை கண்டுள்ளனர். அதன்போது அவர்கள் தடுத்து நிறுத்த முற்பட்ட போது அதிகாரிகளின் சமிக்ஞையை மதிக்காமல் தொடர்ந்து பயணிக்க முற்பட்டது. இதனை தொடர்ந்து மகிழுந்து சாரதியை கைது செய்ய முனைந்தனர்.
அதன்போது மகிழுந்துவை செலுத்திய சாரதி அதிகாரி ஒருவரை தனது வாகனத்தால் இடித்துள்ளார். சில மீற்றர் தூரம் வரை அதிகாரி மகிழுந்தில் சிக்குண்டு இழுத்துச் செல்லப்பட்டார். பின்னர் குறித்த அதிகாரி மீட்க்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
அதேவேளை, மகிழுந்தால் மோதிய சாரதி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் தேடப்பட்டு வருகிறார்.