சீன உணவகம் ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற அசம்பாவிதம்
சீனாவில் உள்ள உணவகம் ஒன்றில் இன்றுகாலை இடம்பெற்ற வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சீனாவின் ஹூமன் மாகாணம் ஷங்ஷா நகரில் நூடுல்ஸ் உணவகம் உள்ளது.
அந்த உணவகத்தில் இன்று காலை ஊழியர்கள் தங்கள் வழக்கமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். இதன்போது , உணவகத்தில் காலை 6.30 மணியளவில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால், உணவகத்தில் தீ விபத்து, கட்டிட இடிபாடுகளும் ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தில் உணவகத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்ததுடன் . மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மேலும் இந்த வெடிவிபத்திற்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றதாக கூறப்படுகின்றது.