ரஷ்யா மீது புதிய தடைகள் விதித்த கனடா
கனடாவின் வெளிநாட்டு விவகார அமைச்சர் அனிதா ஆனந்த், ரஷ்யாவுக்கு எதிராக புதிய தடைகளை இன்று அறிவித்துள்ளார்.
நயாகரா பிராந்தியத்தில் நடைபெறும் ஜீ7 நாடுகள் குழுவின் (G7) வெளிநாட்டு அமைச்சர்கள் கூட்டத்தினை நடத்தும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் ட்ரோன் மற்றும் இணையத் தாக்குதல்களுக்கு பின்னணியில் இருப்போர் மீது தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிய தடைகள்
தடைகளை தவிர்க்கும் நோக்கில் ரஷ்யா பயன்படுத்தும் மறைமுகக் கப்பற்படையையும் (shadow fleet) இலக்கு வைத்து மேலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை, G7 வெளிநாட்டு அமைச்சர்கள், ரஷ்யா மீண்டும் உக்ரைனின் மின்சார வலையமைப்பைத் தாக்கி வரும் சூழலில், உக்ரைன் வெளிநாட்டு அமைச்சரிடமிருந்து நேரடி விளக்கத்தை கோரவுள்ளனர்.
இந்த தாக்குதல்களின் விளைவாக, உக்ரைனில் தொடர்ச்சியான மின்வெட்டு நிலைமைகள் உருவாகி உள்ளன. குளிர்காலம் நெருங்கும் நிலையில், அமெரிக்கா தலைமையிலான தூதரக முயற்சிகள் ஸ்தம்பித்துள்ளன.
இந்த இரண்டு நாள் மாநாட்டில் அவுஸ்திரேலியா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ, சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளையும் கலந்துகொள்ளுமாறு அனிதா ஆனந்த் அழைத்துள்ளார்.
மாநாட்டில் பங்கேற்கும் உயர் மட்ட தூதர்கள், முக்கிய கனிமங்கள், ஆற்றல் பாதுகாப்பு, மற்றும் பொருளாதார நிலைத்தன்மை போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்கவுள்ளனர்.