கனடிய பிரதமர் ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற மாட்டார்
அடுத்த வாரம் நியூயார்க் செல்லும் கனடா பிரதமர் மார்க் கார்னி, ஐ.நா. பொதுச் சபையில் வெளிநாட்டு கொள்கை குறித்த முக்கிய உரையாற்றமாட்டார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கு பதிலாக, கனடாவின் வெளிவிவகார அமைச்சர் அனிதா அனந்த் செப்டம்பர் 29ம் திகதி பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.
கடந்த ஜூலை 11 வெளியிடப்பட்ட இடைக்கால பேச்சாளர் பட்டியலில் கார்னி செப்டம்பர் 27 காலை உரையாற்றுவார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் செப்டம்பர் 5 வெளியிடப்பட்ட புதுப்பிப்பு பட்டியலில் அனந்த் கனடாவின் பிரதிநிதியாக இருப்பார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கார்னிக்கு வழங்கப்பட்ட உரையாற்றும் நேரம் அவரை மீண்டும் நியூயார்க் திரும்பிச் செல்ல வேண்டிய சூழலை உருவாக்கியதால் மாற்றம் செய்யப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.