அமேசானின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி
அமேசானின் புதிய தலைமை செயல் அதிகாரியாக ஆண்டி ஜாஸ்ஸி (Andy Jassy) ஜூலை 5 ஆம் தேதி பதவியேற்கவிருப்பதாக ஜெஃப் பெசோஸ் (Jeff Bezos)தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் வர்த்தகத்தில் கொடிக்கட்டி பறக்கும் அமேசான், 1994-ஆம் ஆண்டு ஜெஃப் பெசோஸால் தொடங்கப்பட்டது. அன்றிலிருந்து தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பில் இருக்கும் ஜெஃப் பெசோஸ்(Jeff Bezos) , தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.
இருப்பினும் அவர் நிறுவனத்தின் ஒரு நிர்வாகத் தலைவராக தொடர்ந்து நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமேசான் வெப் சர்வீஸ் தலைவராக இருக்கும் ஆண்டி ஜாஸ்ஸி, அந்நிறுவனத்தின் க்ளவுட் கம்ப்யூட்டிங் வணிக வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர்.
இந்நிலையில் அமேசானின் புதிய தலைமை செயல் அதிகாரியாக அவர் பதவியேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.