பதவி விலகுகிறாரா பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்?பரபரப்பை ஏற்படுத்திய தகவல்
பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும் இது குறித்து தனது முடிவை நாளை (ஜூன் 22) அவர் அறிவிக்கவுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொழிலாளர் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான உட்கட்சி அரசியல் நெருக்கடி மற்றும் தலைமைத்துவ சவால்கள் காரணமாக பிரிட்டன் பிரதமர் கேர் ஸ்டார்மர் பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இவருக்கு எதிராகத் திரும்பியுள்ளதால் பிரிட்டன் அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஸ்டார்மர் ஆட்சி செய்வதில் கவனம் செலுத்துவதாகவும், பிரதமராகத் தனது பொறுப்புகளைத் தொடர்ந்து ஆற்றி வருவதாகவும் வலியுறுத்தி, அரசாங்க வட்டாரங்கள் இந்தச் செய்திகளை மறுத்துள்ளன.
ஆனாலும் கட்சிக்குள் ஸ்டார்மரின் செல்வாக்கு பெருமளவில் சரிந்துள்ளது. தொடர்ச்சியான ஊழல்கள் மற்றும் கொள்கை மாற்றங்களுக்குப் பிறகு அவர் மிகவும் செல்வாக்கிழந்துவிட்டார்.
இதனால், அவர் வாக்குறுதியளித்தபடி மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த அவரால் முடியாது என பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
தனது தலைமைக்கு வரும் எந்தவொரு சவாலையும் எதிர்த்துப் போராடுவேன் என பிரிட்டனர் பிரதமர் கேர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.