டிரம்ப் மீது மற்றொரு குற்றச்சாட்டு; மீண்டும் ஜனாதிபதியாகும் ஆசை கலையுமா?
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இரகசிய ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர், இரகசிய ஆவணங்களை அங்கீகரிக்காமல் வைத்திருந்தது உட்பட ஏழு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அபாச பட நடிகைக்கு இலஞ்சம்
டொனால்ட் டிரம்ப் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட தீர்மானித்துள்ள நிலையில், சர்ச்சைக்குரிய அபாச பட நடிகைக்கு இலஞ்சம் கொடுத்ததாக ஏற்கனவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இரண்டாவது குற்றச்சாட்டு இது ஆகும். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப்,
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு இது இடம்பெறும் என கருதவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இது அமெரிக்காவிற்கு கருப்புதினம் மிகவேகமாக பாரதூரமாக வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கின்ற நாடாக நாங்கள் காணப்படுகின்றோம் மீண்டும் அதனை வலிமையானதாக்குவோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்