ஒரு பாலினத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கிய மற்றுமொரு நாடு!
ஒரு பாலினத் திருமணங்களுக்கு தென் கொரிய நீதிமன்றமொன்று இன்று அங்கீகாரம் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
ஒரு பாலினத் தம்பதியான சோ சியோங் வூக் மற்றும் கிம் யோங் மின் ஆகியோரினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இவர்கள் இருவரும் 2019 ஆம் ஆண்டு திருமண வைபவமொன்றை நடத்தினர். அதன்பின் இவர்கள் இணைந்து வாழ்க்கின்றனர்.
எனினும், தென் கொரியாவில் ஒரு பாலினத் திருமணங்கள் சட்டபூர்வமானவை அல்ல என்பதால், மேற்படி திருமண வைபவத்துக்கு சட்டரீதியான செல்லுபடித் தன்மை இருக்கவில்லை.
தனது காப்புறுதி தொடர்பில், பயனாளராக தனது துணைவரை சோ சியோங் வூக்கின் பெயரிட்டிருந்தார். ஆனால், அவர்கள் ஒரு பாலினத் தம்பதியினர் என அறிந்துகொண்ட அந்நாட்டின் தேசிய சுகாதார காப்புறுதி சேவை, சோ சியோங்கின் துணைவரின் பெயரை பயனாளராக சேர்க்க மறுத்தது.
இதனால், தேசிய சுகாதார காப்புறுதி சேவைக்கு எதிராக 2021 ஆம் ஆண்டு சோ சியோங் வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கு அந்நாட்டு உயர் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லப்படவுள்ளது. கீழ் நீதிமன்றமொன்று இவ்வழக்கில் தேசிய சுகாதார சேவைக்கு சார்பாக தீர்;ப்பளித்திருந்தது.
எனினும், சோல் நகரிலுள்ள மேல் நீதிமன்றம் (ஐ கோர்ட்) ஒரு பாலினத் தம்பதியினருக்கு ஆதரவாக இன்று தீர்ப்பளித்துள்ளது. சோ சியோங்கின் துணைவரின் பெயரை காப்புறுதிப் பயனாளியாக சேர்ப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது ஒரு பாலினத் தம்பதியினகருக்கு சமத்துவம் கிடைக்க வேண்டும் என விரும்பும் அனைவருக்கும் வெற்றியாகும் என இத்தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யவுள்ளதாக தென் கொரிய தேசிய சுகாதார காப்புறுதி சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.