பற்றியெரியும் பிரிட்டிஷ் கொலம்பியாவின் மற்றொரு பகுதி... அவசரமாக மக்கள் வெளியேற்றம்

Balamanuvelan
Report this article
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மற்றொரு பகுதி பற்றியெரியும் காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளன.
நேற்று இரவு, North Okanagan என்ற பகுதியில் 97ஆவது நெடுஞ்சாலைக்கு அருகில் காட்டுத்தீ பற்றியெரியத் துவங்க, உடனே அப்பகுதியில் வாழும் மக்களை வெளியேற்றும் முயற்சி துவங்கியது. அதே நேரத்தில், மலைக்கு மறுபக்கமுள்ள வீடுகளுக்கும் வீடுகளை விட்டு வெளியேறத் தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பின்னர், அதிகாலை 2.30 மணியளவில், Kalamalka Lakeview Dr. மற்றும் Carriage Lane என்னும் பகுதிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Coldstream மாகாணம் அவசர நிலை பிறப்பித்துள்ளது.
சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து அங்கு பரபரப்பான சூழலே நிலவுவதாக தெரியவந்துள்ளது. இதற்கிடையில், காட்டுத்தீ பற்றியெரிவதைக் காட்டும் வீடியோக்கள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியவண்ணம் உள்ளன.
Surreal pictures and videos coming out of #Vernon tonight #Wildfire #BCWildfire #NorthOkanagan pic.twitter.com/9gOcuN1gUc
— Darrian Matassa-Fung (@darrianmf_gbl) July 10, 2021