1500 கி.மீ. தூர இலக்குகளை துல்லியமாக தாக்கும் ட்ரோன்கள் ; குறிவைக்கப்படும் எண்ணெய் ஆலைகள்
ரஷ்யா- உக்ரைன் இடையிலான போர் 4 ஆண்டுகளை கடந்து நடைபெற்று வருகிறது. இரு நாடுகளும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகின்றன.
ரஷ்யா ட்ரோன்கள் மூலம் உக்ரைனின் எண்ணெய் ஆலைகள் மற்றும் மின்நிலையங்கள் ஆகியவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ரஷ்யாவின் டிரோன் தாக்குதல்களை முறியடிப்பதுடன், ரஷ்யா மீது உக்ரைனும் தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்யா ட்ரோன்களை இடைமறித்து அழிக்கும் வான்பாதுகாப்பு சிஸ்டத்தை மேம்படுத்தி வந்த உக்ரைன், உள்நாட்டிலேயே டிரோன் தயாரிக்கும் பணியையும் முடுக்கிவிட்டது.
இதனால் நீண்ட தூரம் சென்று தாக்கும் வகையிலான ட்ரோன்களை தயாரித்துள்ளது.
இந்த நிலையில் இன்று ரஷியா நாட்டிற்குள் சுமார் 1500 கி.மீ. தூரம் நுழைந்து பெர்ம் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் ஆலையை தாக்கியதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் ரஷ்யாவின் பல எண்ணெய் ஆலைகளை குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்யா போரை நீடிக்க மிகவும் உதவியாக இருக்கும் எண்ணெய் விற்பனையை குறிவைத்து தங்களுடைய நீண்ட தூர தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளோம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.
துல்லியமான தாக்குதால் நடத்தியதற்காக உக்ரைன் பாதுகாப்புப்படைக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
தற்போது 1500 கி.மீ. தூரம் வரை சென்று தாக்குதல் டிரோன்களை பயன்படுத்தி வருகிறொம். இந்த தூரம் இன்னும் நீடிக்கும் வகையில் தொடரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.