ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் சாதனங்கள் அறிமுகம்
கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 மாடலில் கிரீன் கலர் வெர்ஷன் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, ஆப்பிள் நிறுவனத்தின் இணையதளம், யூடியூப் சேனல் மற்றும் ஆப்பிள் டிவி செயலியில் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ரக ஐபோன் உள்ளிட்ட சாதனங்களை அறிமுகப்படும் நிகழ்ச்சி கடந்த ஆண்டைபோலவே இன்றும் இணையவழியில் நடைபெற்று வருகிறது.
'உச்ச செயல்திறன்' என்ற பெயரில் இன்று நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் 5ஜி தொழில்நுட்பத்தில் இயங்கும் புதிய ரக சிறப்பு பதிப்பு ஐபோன்கள், 'ஐபேட் ஏர்' சாதனங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், புதிய மேக் மினி சாதனத்தையும், அனைத்து மேக் சாதனங்களுக்கான புதிய பிராசசரையும் ஆப்பிள் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த நிகழ்வில் அனைவராலும் பெரிதும் எதிபார்க்கப்படும் ஐபோன் எஸ்இ 2022, ஐபோன் எஸ் இ+, ஐபோன் எஸ் இ 5ஜி ஆகிய போன்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
பழைய ஐபோன் எஸ் இ-யை விட மேம்படுத்தபட்ட அம்சங்களுடன் வெளியாகும் இந்த போன் இந்திய மதிப்பில் ரூ.30,000-க்கும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதைத் தவிர கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 மாடலில் கிரீன் கலர் வெர்ஷன் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோன்று இன்று ஐபேட் ஏர் 5 வெளியாகவுள்ளதாக கூறப்ப்படுகிறது.
இதில் சமீபத்திய ஏ15 பயோனிக் பிராசஸர், 5ஜி சப்போர்ட் உள்ளிட்டவை இடம்பெறும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் மேக் கணினிகளை பொறுத்தவரை, எம்2, எம்1 ப்ரோ, எம்1 மேக்ஸ் மற்றும் அதிசக்தி கொண்ட எம்1 மேக்ஸ் சிப்களை கொண்ட மேக் சாதனங்கள் வெளியாக உள்ளன. மேக்புக் ப்ரோ, மேக்புக் ஏர், மேக் மினி ஆகியவை எம்2 சிப்பை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதிய ஐமேக் ப்ரோ, எம்1 ப்ரோ மற்றும் எம்1 மேக்ஸ் ஆப்ஷனுடனும், புதிய மேக் மினி எம்1 ப்ரோ சிப்புடனும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த வருடம் வெளியாகவுள்ள மேக்புக் ஏர், கடந்த ஆண்டு வெளியான மேக்புக் ப்ரோவை போலவே டிசைனில் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இது பல நிறங்களிலான டிசைன்கள் மற்றும் மினி எல்.இ.டிக்களை கொண்டிருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.