மறைந்த பாப்பாண்டவருக்காக கனடாவில் விசேட திருப்பலி ஆதராணைகள்
மறைந்த பாப்பாண்டவர் முதலாம் பிரான்ஸிற்காக கனடாவின் சில இடங்களில் விசேட திருப்பலி ஆராதணைகள் நடைபெறவுள்ளன.
கனடாவின் புதிய கார்டினல் மற்றும் டொராண்டோ மறைமாவட்ட பேராயர் பிராங்க் லியோ, பாப்பாண்டவரின் ஆன்மா சாந்தியடைய இன்றைய பிற்பகலில் ஒரு நினைவு திருப்பலியை நடத்துகிறார்.
இந்த திருப்பலி டொராண்டோவிலுள்ள சென்ட் மைக்கேல் தேவாலயத்தில் நடைபெறவுள்ளது. திருப்பலிக்குப் பிறகு, கார்டினல் லியோ செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளார்.
88-வது வயதில், பக்கவாதம் மற்றும் இதயக்குறைபாட்டால் காலமான பாப்பாண்டவரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை, வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடைபெறும். இன்று மாலை, பாப்பாண்டவருக்காக லியோ மேலும் ஓர் இரவு ஜெப நிகழ்வையும் நடத்த உள்ளார்.
மாண்டிரியலில் உள்ள மேரி குவீன் ஆஃப் தி வேல்டு தேவாலயத்திலும் அருட்தந்தை கிறிஸ்டியன் லெபின் ஒரு நினைவு திருப்பலியையும், அதனைத் தொடர்ந்து ஒரு இரவு ஜெப விழிப்பையும் நடத்த உள்ளார்.