ஈரான் உச்ச தலைவர் காமெனியின் வளாகங்கள் இலக்கு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய புதிய சுற்று ஏவுகணைத் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்களில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
குறிப்பாக, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் அலுவலகங்கள் மற்றும் ஜனாதிபதி மாளிகைக்கு அருகிலுள்ள பகுதிகளில் சுமார் ஏழு ஏவுகணைகள் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

86 வயதான உச்ச தலைவர் காமெனி தற்போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஈரான் உச்ச தலைவர் காமெனி 1989 முதல் ஈரானின் இறுதி அதிகாரமிக்க தலைவராக இருந்து வருகிறார்.
ஈரானின் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தடம் புரளச் செய்வதும், அந்நாட்டின் பாதுகாப்பு மற்றும் தலைமைத்துவ அமைப்பை (Regime Change) சீர்குலைப்பதுமே இந்தத் தாக்குதலின் முக்கிய நோக்கமாகப் பார்க்கப்படுகிறது.
ஈரானிய மக்கள் தங்கள் அரசாங்கத்தைக் கவிழ்க்க இதுவே சரியான தருணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.