இரவுக்குள் முடித்து விடுவோம்; ஈரானை பகிரங்கமாக எச்சரிக்கும் டிரம்ப்!
இரவுக்குள் ஈரானை தாக்கி அழிப்போம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வீடியோ வெளியிட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் ஏவுகணை உற்பத்தி ஆலைகளை தகர்த்து அவர்களின் கடற்படையை அழிப்போம் என டிரம்ப் கூறியுள்ளார்.

சரணடைந்தால் நீங்கள் மரியாதை இல்லையென்றால் மரணம்
இஸ்லாமிய புரட்சிகர காவல் படைக்கும் ஈரான் போலீசுக்கும் நான் சொல்வது இதுதான் இன்று இரவுக்குள் உங்கள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் நீங்கள் மரியாதையாக நடத்தப்படுவீர்கள். இல்லையென்றால் உறுதியாக மரணம் அடைவீர்கள்’ என அவர் எச்சரித்திருக்கிறார்.
ஈரான் அணுசக்தியை வைத்துக்கொள்ளக்கூடாது என அமெரிக்கா தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, ஈரானில் அதிபருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராடியபோது அதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்தது.
ஆனால், ஈரான் அரசு அடிபணியவில்லை. சமீபத்தில், ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சு வார்த்தை நடந்தது. கடந்த 26ம் தேதி நடந்த மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து, இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதலை நடத்த துவங்கினார்கள். வான் வெளி தாக்குதல்களால் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பல கட்டிடங்கள் தீப்பிடித்து எரிகிறது.
அந்த நகரம் முழுவதும் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்கிறது.. ஈரான் அதிபர் மாளிகையிலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது இதையடுத்து, ஈரான் நாட்டு மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல ஈரான் அரசு வலியுறுத்தியிருக்கிறது.
அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஈரான் அருகே நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் 2003ம் வருடம் ஈரான் ஆக்கிரமிப்புக்கு பின் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவ குவிப்பு இது என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.