மத்திய கிழக்கில் போர் பதற்றம் ;அபுதாபியில் விழுந்த ஏவுகணை சிதறல்கள்; ஒருவர் பலி
ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அபுதாபியில் உள்ள குடியிருப்புப் பகுதி ஒன்றின் மீது ஏவுகணைச் சிதறல்கள் விழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலை ஒரு "கோழைத்தனமான செயல்" எனக் கடுமையாகக் கண்டித்துள்ள ஐக்கிய அரபு இராச்சிய பாதுகாப்பு அமைச்சு, இதற்குப் பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையும் தமக்கு இருப்பதாக எச்சரித்துள்ளது.

அமெரிக்க மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய வான்படைகள் இணைந்து இயங்கும் 'அல் தப்ரா' (Al Dhafra) விமானத் தளத்தை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இரான் மிது அமெரிக்கா , இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஈரானும் பதிலடி கொடுத்துவருவதால் உலக நாடுகள் போர் பதற்றத்தால் அச்சத்தில் உள்ளன.