உடல் பருமனால் பெரிதும் அவஸ்தையா? இந்த அற்புத டீயை தினமும் குடித்து வந்தால் போதும்
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலருக்கும் உடல் பருமன் ஒரு பிரச்னையாக உள்ளது. இதற்கு நமது உணவு பழக்கமும் வேலையும் தான் காரணம்.
நம்மில் பலருக்கு உடலை வருத்தி செய்யும் வேலை இல்லை. இல்லத்தரசிகள் செய்யும் பணிகளுக்கும் இயந்திரங்கள் வந்துவிட்டன. உடலில் அதிகளவு கொழுப்பு சேருவதால் தான் எடை கூடுகிறது.
உடல் எடையை குறைக்க பலர் தங்கள் பொழுதை ஜிம்மில் செலவழிக்கின்றனர். கடுமையான உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க முயல்கின்றனர்.இதோ உடல் எடையை குறைக்க எளிமையான வழிகள் சில உள்ளன. அதில் கருஞ்சீரக டீயும் ஒன்று. தற்போது அவற்றை எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம்.
தேவையான பொருள்கள்
- கருஞ்சீரகம் - 2 ஸ்பூன்
- புதினா - 1 கைப்பிடியளவு
- இஞ்சி - 1 துண்டு
- தேன் - 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள்.
கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும். இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள். புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை.
புதினாவைச் சேர்த்ததும் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டைப் போட்டு மூடி விடுங்கள். ஐந்து நிமிடங்கள் கழித்து அந்த டீயை வடிகட்டி அதில் சிறிது தேன் சேர்த்தால் கருஞ்சீரக டீ தயார்.
நன்மைகள்
- நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த உடல் பருமன் பிரச்சினை தான்.
- உடலில் கொழுப்பு எதுவும் சேராமல் பார்த்துக் கொள்வது உடல் பருமனை மட்டுமல்லாது அதனால் ஏற்படும் பிற விளைவுகளில் இருந்தும் தவிர்க்க உதவும். அதற்கு கருஞ்சீரகம் அதிக அளவில உதவுகிறது.
- கருஞ்சீரகத்தைப் பொடியாகவோ அல்லது சூப்பில் கலந்தோ குடிக்கலாம். உடலில் அகட்ட கொழுப்புகளைத் தேங்க விடாமல் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும்.