இசை நிகழ்ச்சி நுழைவுச்சீட்டு மோசடியில் ஈடுபட்ட நபர் கைது
கனடாவில் பிரபல இசைக்கலைஞர் டெய்லர் ஷிப்டின் இசை நிகழ்ச்சிக்கு நுழைவுச்சீட்டு வழங்குவதாக பலர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட மற்றுமொரு நபரை கனடிய போலீசார் கைது செய்துள்ளனர்.
முகநூலில் போலியாக பிரச்சாரம் செய்து இந்த நுழைவுச்சீட்டு விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
70 ஆயிரம் டாலர்கள் மோசடி
இந்த நுழைவுச்சீட்டு மோசடியின் மூலம் சுமார் 70 ஆயிரம் டாலர்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த இசை நிகழ்ச்சிக்கான நுழைவு சீட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்த காரணத்தினால் வேறு நபர்கள் மூலம் நுழைவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்கு பலர் முயற்சித்துள்ளனர்.
இவ்வாறு மேற்கொண்ட முயற்சிகளின் போது பலர் மோசடிகளில் சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது
. இவ்வாறு மோசடியில் ஈடுபட்ட மற்றுமொரு நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
டேவிட் லைடு பிரேக் என்ற 56 வயதான பெர்லிங்டனை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த சந்தேக நபருக்கு எதிராக சுமார் 19 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.