நூதன விளையாட்டின் வாயிலாக பணம் பறித்த நபர்கள் கைது
நவீன கேம்கள் மூலம் சுற்றுலா பயணிகளிடம் பணம் பறித்த மூன்று பேரை பொலிஸார் போலீசார் Aulnay-sous-Bois நகரில் கைது செய்தனர்.
இங்கு வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஈபிள் கோபுரத்திற்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்படும் புதுமையான ஏமாற்று விளையாட்டில் பலர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டால் எளிதில் ஏமாற்றப்படுவது சுற்றுலாப் பயணிகளுக்கு தெரியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை காலை Drancy மற்றும் Aulnay-sous-Bois பகுதிகளில் மூவரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் ஆண் எனவும் ஒருவர் பெண் எனவும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், இரண்டு சொகுசு கார்கள் - € 16,000 பணம் - கைப்பற்றப்பட்டது.