பிரித்தானியாவில் தடகள போட்டியில் காரில் வந்து பரிசை வென்ற வீரர்!
பிரித்தானியாவில் நடைபெற்ற தடகள போட்டியில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 7-ம் திகதி நடைபெற்ற 50 மைல் தடகள போட்டியில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு 3 வது இடத்தை பிடித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், போட்டியின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.

செங்கடல் பகுதியில் இஸ்ரேலியர்கள் உட்பட பல நாடுகளை சேர்ந்த 52 பேர் பயணம் செய்த கப்பலை கடத்தும் அதிர்ச்சி காணொளி (Video)
தடகள போட்டியின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் தடகள போட்டிகளில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
இதற்கான உத்தரவை பிரித்தானியாவை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது.
ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது.