இன்று இடம்பெற்ற கோர விபத்து ; 20 பேர் காயம்
பொரளையிலிருந்து அத்துருகிரிய நோக்கி வந்த டிப்பர் லொறியுடன் , பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று (17) அதிகாலை 4.15 மணியளவில் பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்றும் டிப்பர் லொறியொன்றும் அத்துருகிரிய, கோவின்ன மாவத்தைக்கு அருகில், நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், பேருந்து சாரதி உட்பட 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக கடும் வாகன நெரிசல்
காயமடைந்தவர்கள் ஒறுவல மற்றும் ஹோமாகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அத்துருகிரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் இரு கால்களும் முறிந்து பலத்த காயமடைந்துள்ளதால், அவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் பணியாளர்களை ஏற்றிச் சென்ற குறித்த பேருந்து, அத்துருகிரியவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்தது. இதன்போது, திடீரென வீதியை விட்டு விலகிச் சென்று, டிப்பர் லொறியுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
. இந்த விபத்தினால் கொடகம - பொரளை வீதியில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக கடும் வாகன நெரிசல் காணப்பட்டது.