பிரான்சில் நாடாளுமன்ற உறுப்பினரை தாக்கி கொள்ளை
LREM கட்சியை சேர்ந்த நாடாளுமனற்ற உறுப்பினர் ஒருவரை தாக்கி அவரிடமிருந்து பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
LREM கட்சியை சேர்ந்த நாடாளுமனற்ற உறுப்பினர் Coralie Dubost (வயது 38) மற்றும் அவரது கணவர் Stanislas ஆகியோர் நேற்றைய முன்தினத்தில் கொள்ளை சம்பவத்தால் பாதிக்கப்பட்டனர்.
இங்குள்ள Café de l'Alma இல் இருந்து இவர்கள் இருவரும் வெளியேறியுள்ளனர். அந்த சமயத்தில் அவர்கள் இருவரும் கொள்ளையர்கள் இருவரால் சுற்றிவளைக்கப்பட்டு தாக்குதலுக்கு ஆளாகி அவர்களது தொலைபேசி மற்றும் ரோலெக்ஸ் கைக்கடிகாரம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கைப்பை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டன.
கைப்பைக்குள் 2000 யூரோக்கள் பணமும், தேசிய பாராளுமன்ற இலட்சிணையும் மேலும் சில திறப்புக்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையர்கள் இருவரும் Cognacq-Jay வீதியால் தப்பியதாகவும் பொலிஸார் பின் தொடர்ந்தாகவும் தெரிவித்தனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.