ஹோமுஸ் நீரிணையில் பிரித்தானியா கப்பல் மீது தாக்குதல்
ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியாவுக்குச் சொந்தமான எரிபொருள் போக்குவரத்து கப்பல் ஒன்றுக்கு இன்று (27) அடையாளம் தெரியாத தரப்பினரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதலினால் கப்பலுக்குச் சிறிதளவு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அதில் இருந்த பணியாளர்கள் அனைவரும் எவ்வித ஆபத்துகளுமின்றி பாதுகாப்பாக உள்ளதாக பிரித்தானிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் அறிவித்துள்ளது.

இதற்கு சில நாட்களுக்கு முன்னரும், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணித்த சிங்கப்பூருக்குச் சொந்தமான எரிபொருள் கப்பல் ஒன்றின் மீதும் இதேபோன்றதொரு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க அதிகாரிகளால் நேற்று (26) ஈரானில் உள்ள சில இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.