ரஃபா மீது தாக்குதல்; ஜோபைடன் பகிரங்க எச்சரிக்கை!
காசாவின் ரஃபாமீது , இஸ்ரேல் பாரிய தாக்குதலை மேற்கொண்டால் இஸ்ரேலிற்கு சில ஆயுதங்களை வழங்குவதை நிறுத்துவோம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் எச்சரித்துள்ளார்.
ரஃபாவிற்குள் நுழைந்தால் நான் ரஃபா விடயத்தில் வரலாற்றுரீதியாக பயன்படுத்தப்படும் சில ஆயுதங்களை வழங்க தயாரில்லை எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பாக இருப்பதை தொடர்ந்தும் உறுதிசெய்வேன் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். அதோடு ஆட்டிலறி எறிகணைகளையும் ஆயுதங்களையும் இஸ்ரேலிற்கு வழங்கமாட்டோம் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
தற்போது ரபாவில் காணப்படும் நிலையை தரைநடவடிக்கை என அமெரிக்கா தெரிவிக்காது, இஸ்ரேலிய படையினர் இன்னமும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிற்குள் செல்லவில்லை என தெரிவித்துள்ள பைடன், இஸ்ரேலிய படையினர் எல்லையில்தான் உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்தால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என இஸ்ரேலிய பிரதமருக்கு தெளிவாக தெரிவித்துள்ளேன் எனவும் அதிபர் பைடன் குறிப்பிட்டுள்ளார்.