உலக கால்பந்துப் போட்டியில் போதைப்பொருள் கடத்த முயற்சி!
உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியில் போதைப்பொருள் கடத்துவதற்கான முயற்சியைக் கத்தார் முறியடித்துள்ளது.
கால்பந்து விளையாட்டாளர்களால் பயன்படுத்தப்படும் tramadol மாத்திரைகள், கஞ்சாவிலிருந்து செய்யப்படும் hashish போதைப்பொருள் முதலியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஹமாட் அனைத்துலக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் பயணி ஒருவரின் உடைமைகளில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஏறக்குறைய 2,000 tramadol மாத்திரைகளும் சுமார் 460 கிராம் hashish பொதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கத்தாரில் போதைப்பொருள் வைத்திருப்பதற்கு எதிராகக் கடுமையான சட்டங்கள் உள்ளன.
அதிகக் காலச் சிறைத்தண்டனை, கூடுதல் அபராதம் இவற்றோடு போதைப்பொருள் வைத்திருப்போர் நாடு கடத்தப்படுவதற்கும் சட்டத்தில் இடமுண்டு என தெரியவந்துள்ளது.