ஓடும் ரயிலில் இளம்பெண் மீது பலாத்கார முயற்சி ; சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ
பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் அருகே சென்று கொண்டிருந்த ரயிலில் பிரேசில் நாட்டை சேர்ந்த 26 வயது இளம்பெண் பயணம் செய்தபோது, வாலிபர் ஒருவர் திடீரென அவரை பலாத்காரம் செய்ய முயன்றார்.
இதனால் பயந்து போன அந்த இளம்பெண் அலறியுள்ளார். இதனை தொடர்ந்து, அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் பற்றி ஜோர்டானா பொலிஸாருக்கு புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இது பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதன் அடிப்படையில் அந்த வாலிபரை பொலிஸார் தேடி வந்தனர்.

இதற்கிடையே சம்பவம் நடைபெற்றபோது அங்கிருந்த ஒரு பெண் எடுத்த வீடியோ வைரலாகி உள்ளது. எகிப்து நாட்டை சேர்ந்த 26 வயதுடைய அந்த வாலிபரை பொலிஸார் கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
எனினும், இளம்பெண்ணுடன் வாக்குவாதம் ஏற்பட்டது என்றும் ஆனால், பலாத்கார முயற்சியில் ஈடுபடவில்லை என அந்த வாலிபர் கூறியுள்ளார்.
இந்த சம்பவத்தில், 26 வயது பிரேசில் நாட்டு இளம்பெண் ஒருவர் பாரீஸ் புறநகர் ரயில் ஒன்றில் பயணித்து உள்ளார். அவருடைய பெட்டியில் வேறு ஆட்கள் அதிகம் இல்லாத சூழலில், நபர் ஒருவர் அவருடைய உள்ளாடையை பிடித்து, இழுத்திருக்கிறார்.
அந்த இளம்பெண் கூறும்போது, அந்த வாலிபர் பலாத்கார தாக்குதல் நடத்தியதுடன், உடல்ரீதியாக தாக்குதல் நடத்தியும், கடித்தும் வைத்திருக்கிறார் என குற்றச்சாட்டாக கூறினார்.

ரெயிலில் இருந்த மற்றொரு பெண் மொபைல் போனில் வீடியோவாக படம் பிடித்துள்ளார். அது பின்னர் சமூக ஊடகங்களில் பரவி வைரலாகி உள்ளது. அவர் அந்த வாலிபரை தடுக்க முயன்றுள்ளார்.
முடியாதபோது, வீடியோ பதிவு செய்துள்ளார். அதில், வாலிபர் தப்பி ஓடும் காட்சிகள் உள்ளன. சமீப ஆண்டுகளாக பிரான்சில் பொது போக்குவரத்து வாகனங்களில் பலாத்காரம் உள்ளிட்ட பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
2016-ம் ஆண்டில் இருந்து இதுவரை 86 சதவீதம் அளவுக்கு பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து உள்ளன என அரசின் சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.