மியான்மார் பூகம்பத்தின் பின் ஆங்சாங்சூகி எங்கே? மகன் வெளியிட்ட தகவல்!
மியன்மாரின் இராணுவ ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜனநாயக தலைவி ஆங்சாங்சூகியின் பூகம்பத்தின் பின்னரான நிலை குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது மகன் கவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும் ஆங்சாங்சூகி தடுத்துவைக்கப்பட்டுள்ள நே பிய்டாவ் சிறைச்சாலை பூகம்பத்தினால் பாதிக்கப்படவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அவரின் மகன் கிம் அரிஸ், ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியாமலுள்ளது என தெரிவித்துள்ளார்.
தனிமைச்சிறையில் அடைக்கப்பட்ட ஆங்சாங்சூகி
பூகம்பத்திற்கு முன்னரே அவரை தொடர்புகொள்வது என்பது மிகவும்கடினமான விடயமாக காணப்பட்டது என தெரிவித்துள்ள ஆங்சாங்சூகியின் மகன் நான்கு வருடத்திற்கு ஒருமுறையே அவர்சிறையிலிருந்து கடிதம் எழுதுவதற்கு அனுமதித்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அவரது சட்டத்தரணிகளாலும் அவரை தொடர்புகொள்ள முடியாது,அவர் ஒரு தனிமைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றே நான் அறிகின்றேன் என ஆங்சாங்சூகியின் மகன் தெரிவித்தள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் நான் அவருடன் இருந்து பிரிக்கப்பட்டுள்ளேன் ஆனால் தற்போதைய நிலை வித்தியாசமானது அவர் சிறையில் இருக்கின்றார், எனவும் ஆங்சாங்சூகி மகன் தெரிவித்துள்ளார்