டொரொண்டோவில் கனமழை எச்சரிக்கை - 50 மில்லிமீட்டர் மழை பெய்யலாம்
டொரொண்டோவிற்கான மழை எச்சரிக்கையை கனேடிய வானிலை நிலையம் வெளியிட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் 50 மில்லிமீட்டர் வரை மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தென்மேற்கு ஒன்டாரியோவில் மழை தொடங்கி, பிற்பகலில் கோல்டன் ஹார்ஸ்ஷூ பகுதிக்கு நகரும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை காரணமாக சில பகுதிகளில் 50 மில்லிமீட்டரைத் தாண்டிய மழை பதிவாகலாம் எனவும் வானிலை துறையின் எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சிறிய காலத்திற்கு உறைபனி மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நெடுஞ்சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், மற்றும் வாகன தரிப்பிடங்கள் பனியாகி, வழுக்கலாக மாறக்கூடும்,” எனவும், யார்க் மற்றும் டர்ஹாம் பகுதிகள் உறைபனி மழை எச்சரிக்கையின் கீழ் உள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.
தொடர் மோசமான வானிலை காரணமாக, டொரோண்டோ பெரும்பாக பகுதி வடக்கில் உள்ள சில பகுதிகளில் பாடசாலை பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.