கனடிய பிரதமருக்கும் ஒன்றாரியோ முதல்வருக்கும் இடையில் சந்திப்பு
ஒன்றாரியோ மாகாண முதல்வர் டக் போர்ட், கனடிய பிரதமர் பிரதமர் மார்க் கார்னியை சந்தித்து பேச்சுவார்த்தை நட்தத உள்ளார்.
ஒட்டாவாவில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று (ஆகஸ்ட் 18, 2025) ஒட்டாவாவில் சந்திப்பு நடத்துகின்றனர்.

கூட்டாட்சி அரசு அதிகாரி ஒருவர், இந்த இரு தலைவர்களுக்கிடையிலான சந்திப்பில் எந்த அறிவிப்பும் வெளியாக வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
கார்னி மற்றும் ஃபோர்ட், வாழ்க்கைச் செலவு, வீட்டு வசதி மற்றும் குற்றம் பற்றி விவாதிக்கவிருப்பதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்.
இந்த சந்திப்பு ஓர் சாதாரணமாக சந்திப்பு என முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க வரி விதிப்பு காரமாக பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்தும், அரச வரிகளை குறைக்க வேண்டியதன் அவசியத்தையும் போர்ட் பிரதமருக்கு விளக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.