கனடாவில் சமூக ஊடகப் பதிவினால் சர்ச்சையில் சிக்கிய தாதி ; விதிக்கப்பட்ட தண்டனை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஒரு தாதியொருவர் சமூக ஊடகப் பதிவு காரணமாக பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
மாற்றுப்பாலின (transgender) சமூகத்தினரைப் பற்றி “வேறுபாடு மற்றும் அவமானகரமான” கருத்துகளை வெளியிட்டதாக குறித்த தாதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த தாதியின் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் இந்த செயலுக்காக 94000 டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியா தாதியர்கள் மற்றும் குடும்ப நல அதிகாரிகள் (B.C. College of Nurses and Midwives) சங்கம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஏமி ஹாம் என்ற தாதிக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஜூலை முதல் 2021 மார்ச் வரை பல ஆன்லைன் தளங்களில் ஹாம் வெளியிட்ட கருத்துகள் மாற்றுப் பாலின சமூகத்தினருக்கு எதிரான அவமதிப்பு கருத்துக்களைக் கொண்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.