பீல் பிராந்தியத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி பலி
கனடாவின் பீல் பிராந்தியத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை பிராம்ப்டனில் ஒரு வாகனம் மோதியதில் ஒரு பெண் பாதசாரி உயிரிழந்ததார் என பீல் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 7:15 மணியளவில் கவண்ட்ரிசைட் மற்றும் ஏர்போர்ட் சாலைகளுக்கு அருகே இடம்பெற்றுள்ளது.
சமூக ஊடக பதிவில், காவல்துறை ஒரு பிக்அப் ட்ரக் ஒரு பெண்ணை மோதியதாகவும், அவர் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்ட போதிலும் பின்னர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தது.
வாகன ஓட்டுநர் விபத்து இடத்தில் நின்று விசாரணையாளர்களுடன் ஒத்துழைப்பு தருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பீல் பிராந்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.