எயார் கனடா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் – பிரதமர்
எயார் கனடா பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டுமென கனடிய பிரதமர் மார்க் கார்னி வலியுறுத்தியுள்ளார்.
எயார் கனடா விமான சேவை நிறுவனமும் விமானப் பணியாளர்களும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
விமானப் பணியாளர்கள் எல்லா நேரங்களிலும் நியாயமாக நடத்தப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினால் ஆயிரக் கணக்கான பயணிகள் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளினால் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கனடியர்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிணக்கிற்கு துரித கதியில் தீர்வு காணப்பட வேண்டுமென இரண்டு தரப்பினரையும் கோருவதாகத் தெரிவித்துள்ளார்.