நான்கு உயிர்களை பலி கொடுத்த இந்திய வம்சாவளி சாரதி: விக்டோரியாவில் சம்பவம்
அவுஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கி 4 இந்தியர்கள் பலியான வழக்கில், அந்த வாகனத்தின் சாரதி மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
காயங்களுடன் தப்பி தற்போது மருத்துவமனை சிகிச்சையில் இருக்கும் ஹரிந்தர் சிங் என்ற அந்த சாரதி மீது ஆபத்தான முறையில் வாகனம் செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியது உட்பட பல பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
ஜனவரி 4ம் திகதி விக்டோரியா மாகாணத்திலேயே குறித்த சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. ஹரிந்தர் சிங் செலுத்திய வாகனமானது இன்னொரு வாகனத்துடன் பக்கவாட்டில் பலமாக மோதியுள்ளது.
இதில் ஹரிந்தர் சிங் வாகனத்தில் பயணம் செய்த 4 பயணிகளும் சம்பவயிடத்தில் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். விபத்தில் இறந்த நால்வருடன் சாரதி ஹர்விந்தரும் இந்திய மாநிலம் பஞ்சாபை சேர்ந்தவர்கள் ஆவர்.
Shepparton பகுதியில் நண்பர்களை சந்திக்கும் பொருட்டு, அந்த நால்வரும் ஹரிந்தர் சிங் வாகனத்தில் பயணித்துள்ளனர். மேலும், வாகனம் மோதியதும் பயணிகளில் மூவர், அந்த வாகனத்திற்கு வெளியே தூக்கி வீசப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பிலும் பொலிசார் விசாரணை முன்னெடுக்க இருக்கின்றனர். மேலும், விபத்தில் சிக்கிய இன்னொரு வாகனத்தின் சாரதி 29 வயது நபர் லேசான காயங்களுடன் தப்பியதாக கூறப்படுகிறது.