அவுஸ்திரேலியாவில் முதல்முறையாக பெண் இராணுவத் தளபதி நியமனம்
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதல்முறையாக பெண் இராணுவத் தளபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவில் பாதுகாப்புப் படையில் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், 125 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக பெண் ஒருவர் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளார்.
இராணுவ கூட்டு நடவடிக்கைகளுக்கான தலைவராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (55) இந்தாண்டு ஜூலை முதல் இராணுவத் தளபதியாக பதவியேற்கவுள்ளார்.
தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சிமோன் ஸ்டூவர்ட்-க்கு மாற்றாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலிய இராணுவத்தில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வரும் நிலையில் இராணுவத் தளபதியாக சூசன் கோய்ல் நியமிக்கப்பட்ட உத்தரவு வெளியாகியுள்ளது.