அவுஸ்திரேலியா தடை; 5.5 இலட்சம் கணக்குகளை முடக்கிய மெட்டா
அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்திருப்பதைத் தடை செய்யும் புதிய சட்டம் கடந்த டிசம்பரில் அமுலுக்கு வந்தது.
இதையடுத்து, அதன் முதல் நாட்களிலேயே மெட்டா நிறுவனம் சுமார் 5.5 இலட்சம் கணக்குகளை முடக்கியுள்ளது.

சிறுவர்கள் தீய வழிகளுக்கு செல்வதிலிருந்து பாதுகாப்பது
அவுஸ்திரேலியா இந்த சட்டத்தின் கீழ், 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் இன்ஸ்டாகிராம், முகநுல் உள்ளிட்ட உலகின் பிரபலமான சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்திருப்பதைத் தடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
உலக நாடுகள் கவனித்து வரும் சமூக வலைத்தளங்களின் தடை , சிறுவர்கள் தீய வழிகளுக்கு செல்வதிலிருந்து பாதுகாப்பது அவசியம் என மெட்டா நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
அதோடு இளைஞர்களை பாதுகாக்க மேலும் நடவடிக்கைகள் தேவை என்பதில் தாங்களும் உடன்படுவதாக மெட்டா உள்ளிட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் புதிய சட்டத்தின் முதல் வாரத்தில், இன்ஸ்டாகிராமில் 3,30,639 கணக்குகள், முகநுலில் 1,73,497 கணக்குகள், மற்றும் த்ரெட்ஸ் தளத்தில் 39,916 கணக்குகள் முடக்கப்பட்டதாக மெட்டா தெரிவித்துள்ளது.