அவுஸ்திரேலியா சென்ற இலங்கைப் பெண்ணுக்கு நேர்ந்த கதி; கையை அகற்றிய மருத்துவர்கள்!
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் தனது மகளைப் பார்க்கச் சென்ற இலங்கைப் பெண் ஒருவர் கொடிய பாக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புருலி அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரின் தோலை , அந்த நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் உண்ணுவதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கையை அகற்றிய மருத்துவர்கள்
74 வயதான இலங்கை பெண்மணி, தனது மகள் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்திப்பதற்காக கடந்த ஜனவரி மாதம் அவுஸ்திரேலியா வந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர் தனது மகளின் வீட்டில் கிட்டத்தட்ட ஆறு மாதங்களாக தங்கி வந்துள்ளார். கடந்த மாதம் ஒரு நாள், வலியால் இருமல் வந்ததாகவும், அப்போது அவரது ஒரு கை வீங்கி நீல நிறமாக மாறியதாகவும் கூறப்படுகின்றது.
அப்போது, அவரது மகள் பெனடோல் கொடுத்ததாகவும் ஆனால் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கைப் பெண்ணுக்கு தொற்றிய பாக்டீரியாவை முதலில் மருத்துவர்களால் அடையாளம் காண முடியவில்லை என்றும் கூறப்படுகின்றது.
மேலும் , பாதிக்கப்பட்ட பெண்ணின் கையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.